Hafsa Ladies Arabic College | Weligama, Sri Lanka
அறிவும் ஒழுக்கமும்

ஹப்ஸா மகளிர் அரபுக் கல்லூரி

இஸ்லாமிய அறிவு, அரபு மொழி, குர்ஆன், ஹதீஸ் மற்றும் ஒழுக்கப் பயிற்சியில் பெண்களுக்கான கல்விப் பயணத்தை அழகாக உருவாக்கும் கல்வி நிலையம்.

Latest News

ஸைனப் பின்து ஹுஸைமா (ரலி) : زينب بنت خزيمة

ஸைனப் பின்து ஹுஸைமா (ரலி) : زينب بنت خزيمة

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், சொர்க்கத்தை அனந்தரங்கொள்ளக் கூடிய பெண்களைத் தான் இறைவன் என்னை மணமுடித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளான். அன்னை ஜைனப் பின்த் ஃகஸீமாஹ் (ரழி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தவர்களில் ஏழைகளுக்கு இரங்கக் கூடியவர்களாகவும், அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டக் கூடியவர்களாகவும் திகழ்ந்திருக்கின்றார்கள் என்பது எல்லோரும் அறிந்த உண்மையாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு நபித்துவப்பட்டம் வழங்கப்படுவதற்கு சற்று 13 வருடங்களுக்கு முன் பிறந்தவர்கள் தான் அன்னையவர்கள். ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மக்களில் ஒருவராக அன்னை ஜைனப் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

அன்னையவர்கள் அப்துல்லா பின் ஜஹ்ஸ் (ரலி) என்ற நபித்தோழருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டிருந்தார்கள். உஹதுப் போர்க்களத்தில் இந்த அருமை நபித்தோழர் தனது இன்னுயிரை இஸ்லாத்திற்காக தியாகம் செய்த பின்பு, அன்னையவர்கள் விதவையாக தனிமரமானார்கள். அன்றைய வழக்கப்படி, போரில் இறந்த நபித்தோழர்களின் மனைவிமார்களை யாராவது ஒரு தோழர் மணந்து கொள்வதோடல்லாமல், அந்தத் தோழரது குழந்தையையும் தத்தெடுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. அதன்படி, அன்னையவர்களின் முதற் கணவர் அப்துல்லா பின் ஜஹ்ஸ் (ரலி) அவர்கள் உயிர்த்தியாகியாக ஆனதன் பின்பு, அன்னையவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்ததன் பின்பு வெறும் எட்டு மாதங்களே அன்னையவர்கள் உயிருடன் இருந்தார்கள். ஹிஜ்ரி 4ம் ஆண்டு அன்னையவர்கள் வபாத்தாகிவிட்டார்கள். அவர்கள் மரணமடைந்த பொழுது, அவர்களுக்கு வெறும் 30 வயது தான் ஆகியிருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன்னின்று ஜனஸாத் தொழுகையை நிறைவேற்ற, அன்னையவர்கள் ஜன்னத்துல் பக்கீயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாளில் முதன் முதலாக அன்னை கதீஜா (ரலி) அவர்களை இழந்தார்கள். அதன் பின் அன்னை ஜைனப் (ரலி) அவர்களை இரண்டாவதாக இழந்தார்கள். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக.

உங்கள் கருத்தை எழுதுங்கள்
கருத்துகள்

கருத்துகள் இல்லை.