Hafsa Ladies Arabic College | Weligama, Sri Lanka
அறிவும் ஒழுக்கமும்

ஹப்ஸா மகளிர் அரபுக் கல்லூரி

இஸ்லாமிய அறிவு, அரபு மொழி, குர்ஆன், ஹதீஸ் மற்றும் ஒழுக்கப் பயிற்சியில் பெண்களுக்கான கல்விப் பயணத்தை அழகாக உருவாக்கும் கல்வி நிலையம்.

Latest News

உம்மு ஹபீபா பின்து அபீ ஸுப்யான் (ரலி) : أم حبيبة بنت أبي سفيان

உம்மு ஹபீபா பின்து அபீ ஸுப்யான் (ரலி) : أم حبيبة بنت أبي سفيان

அபூ ஸுப்யான் (ரலி) அவர்களின் புதல்வியும், முஆவியா (ரலி) அவர்களின் சகோதரியுமான உம்மு ஹபீபா (ரலி) அவர்களின் பெயர் ரம்லாவாகும். இவர்கள் நபி (ஸல் அவர்களின் உறவுக்காரப் பெண்ணாகும். உபைதுல்லாஹ் பின் ஜஹ்ஷ் என்பவரை ஏற்கனவே திருமணம் செய்திருந்தார்கள். இருவரும் ஹபஷாவிற்கு ஹிஜ்ரத் சென்றார்கள். அங்கு சென்றபின் கணவர் மதம்மாறி கிறிஸ்துவத்திற்குச் சென்று அதிலேயே மரணித்துவிட்டார். இதனைக் கேள்விப்பட்ட நபியவர்கள் அவர்களை மணக்க விருப்பப்பட்டார்கள். அந்நாட்டு மன்னார் நஜாஷி வலியாக நின்று திருமணத்தை நடத்திவைத்தார்கள். நபியவர்களுக்குப் பதிலாக அவர்களே 4000 திர்ஹங்களை மஹராகக் கொடுத்தார்கள். தனது தகப்பன் இஸ்லாத்திற்கு வரும்வரை மார்க்க விடயங்கள் தவிர்த்து ஏனைய விடயங்களில்; உபகாரம் புரிந்து வந்தார்கள்.

மக்காவெற்றியின் போது அபூ ஸுப்யான் தனது மகளின் மூலம் நபியவர்களை நெருங்கநாடி அன்னையவர்களைத் தேடி வந்தார்கள். நபியவர்களின் விரிப்பில் உட்கார முனைந்தபோது அவ்விரப்பை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் சுருட்டி வைத்துவிட்டார்கள். அதைப் பார்த்த அபூ ஸுப்யான் இந்த விரிப்பு எனக்குப் போதாதா? அல்லது நான் இதற்குப் போதாதா? என்று கேட்டார். இல்லை, இது நபியவர்களின் விரிப்பு, இதில் உட்கார நீங்கள் தகுதியில்லை, ஏனெனில் நீங்கள் இணைவைப்பாளர் என்று பதிலளித்தார்கள். அப்போது அபூ ஸுப்யான் நீ என்னை விட்டுச் சென்றபிறகு ஏதோ கெடுதி தீண்டியிருக்கிறது என்றார். ஹிஜ்ரி 44ம் ஆண்டு மதீனாவில் அன்னையவர்கள் மரணித்தார்கள். நபியவர்களைத் தொட்டும் 65 நபிமொழிகள் அறிவித்துள்ளார்கள். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக்கொள்வானாக.

உங்கள் கருத்தை எழுதுங்கள்
கருத்துகள்

கருத்துகள் இல்லை.