Hafsa Ladies Arabic College | Weligama, Sri Lanka
அறிவும் ஒழுக்கமும்

ஹப்ஸா மகளிர் அரபுக் கல்லூரி

இஸ்லாமிய அறிவு, அரபு மொழி, குர்ஆன், ஹதீஸ் மற்றும் ஒழுக்கப் பயிற்சியில் பெண்களுக்கான கல்விப் பயணத்தை அழகாக உருவாக்கும் கல்வி நிலையம்.

Latest News

கதீஜா பின்து குவைலித்

கதீஜா பின்து குவைலித் : خديجة بنت خويلد

மக்காவில் கி.பி.556 ஆம் ஆண்டு ஃபாத்திமா பின்த் ஸயீத் மற்றும் குவைலித் பின் அஸத் தம்பதியினருக்க மகளாக கதீஜா (ரலி) அவர்கள் பிறந்தார்கள். மிகவும் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்த கதீஜா (ரலி) அவர்கள் மிகவும் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். அபூ ஹாலா என்பவரைத் தனது முதல் கணவராகத் திருமணம் செய்தார்கள். ஆனால் குறுகிய காலத்திலேயே அபூ ஹாலா அவர்கள் மரணமடைந்து விட்டார்கள். முதல் கணவர் இறந்ததன் பின் அதீக் பின் அய்த் பின் அப்துல்லா அல் மக்ஸூமி என்பவரைத் திருமணம் செய்தார்கள், ஆனால் இவர்களது திருமணம் வெகு விரைவிலேயே முறிந்து விட்டது. இந்த இரண்டாவது திருமணத்தின் மூலம் கதீஜா (ரலி) அவர்கள், ஹிந்து என்றொரு பெண் குழந்தையைப் பெற்றார்கள். இந்த இரண்டாவது திருமண முறிவுக்குப் பின் தனது குழந்தையை வளர்த்தெடுப்பதிலும், மேலும் தனது வியாபாரத்தைப் பெருக்குவதிலும் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நேர்மையான நாணயமான நற்குணங்களைப் பற்றிக் கேள்விப்பட்ட கதீஜா (ரலி) அவர்கள், தனது வியாபாரத்தை ஏற்று நடத்துவதற்கு சம்பள அடிப்படையில் வேலைக்கு வந்து சேருமாறு அழைப்பு விடுத்தார்கள். கதீஜா (ரலி) அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், கதீஜா (ரலி) அவர்களின் நன்னம்பிக்கையைப் பெற்ற அடிமையான மைஸரா என்பவருடன் வியாபார நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் சென்றார்கள்.

இந்த வியாபாரப் பயணத்தில் கதீஜா (ரலி) அவர்களுக்கு மிகப் பெரிய இலபாம் கிடைத்ததோடு, மைஸராவுக்குச் சொல்ல முடியாத அதிசயத்தக்க சில நிகழ்வுகளை நேரில் காணும் வாய்ப்பும் கிடைத்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் காணப்பட்ட நற்குணங்கள், நம்பிக்கை, நாணயம், ஒப்பந்தங்களை நிறைவேற்றுதல், கொடுக்கல் வாங்கலில் காணப்பட்ட நாணயம், மற்றும் வியாபாரத் திறமை ஆகியவை யாவும் மைஸராவை அதிசயிக்க வைத்தன.

நாடு திரும்பியவுடன் முதல் வேலையாக, தன்னுடைய எஜமானியான கதீஜா (ரலி) அவர்களிடம் சென்று பயண நெடுகிலும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை மைஸரா விவரிக்க ஆரம்பித்து விட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி மைஸரா மூலம் அறிந்து கொண்ட கதீஜா (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணமுடித்துக் கொள்ள ஆவல் கொண்டார்கள். அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு 25 வயதும், கதீஜா (ரலி) அவர்களுக்கு 40 வயதும் (இன்னும் சில அறிவுப்புகளின்படி 28 வயதும்) ஆகியிருந்தது. இரு குடும்பதிதிலுருந்தும் பெரியோர் ஆலோசித்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.

இறைத்தூதர் (ஸல்) மற்றும் கதீஜா (ரலி) தம்பதிகளுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. காசிம், அப்துல்லா என்ற இரண்டு மகன்களும் மற்றும் ஸைனப், ருக்கையா, உம்மு குல்தூம் மற்றும் ஃபாத்திமா ஆகிய மகள்களையும் கதீஜா (ரலி) அவர்கள் பெற்றெடுத்தார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்ட போது முதலில் பயந்து என்னைப் போர்த்துங்கள் என்று கூறிய நேரத்தில் அன்னை கதீஜாவே மிகவும் உறுதுணையாக இருந்து முதலில் இஸ்லாத்தை ஏற்றார்கள்.

இஸ்லாத்தின் மீது அவர்களுக்கு இருந்த ஈடுபாடு, உறுதியான நம்பிக்கை, இன்னும் அவரது அரும்பெருங் குணங்கள் இவையனைத்தும் அல்லாஹ்வின் அளப்பெரும் அருளுக்கும், இன்னும் வான தூதர் ஜிப்ரில் (அலை) அவர்கள் மூலமாக வாழ்த்துச் செய்தியையும் பெற்றுத் தந்தது. இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முதல் மனைவியும், அதனை விட இவர்கள் உயிரோடு இருந்த காலம் வரைக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இன்னொரு மனைவியைத் திருமணம் செய்து கொள்ளவில்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் 24 ஆண்டுகள் அன்போடும், பாசத்தோடும் குடும்பம் நடத்தினார்கள். அன்னை அவர்கள் வசதியான குடும்பத்தில் பிறந்து, வசதியான வாழ்வுக்குச் சொந்தக்காரராக இருந்த போதிலும், மக்கத்துக் குறைஷிகள் இறைத்தூதர் (ஸல்) அவர்களையும், இன்னும் அவர்கள் கொண்டு வந்த தூதைச் சுமந்த நெஞ்சங்களையும், அபூதாலிப் கணவாய்க்கு அனுப்பி வைத்துர் சமூக பகிஷ்காரம் செய்த பொழுதுர் இறைத்தூதர் (ஸல்) அவர்களது வலக்கரமாக இருந்து செயல்பட்டுர் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் தோளோடு தோள் கொடுத்து நின்றார்கள். அபூ தாலிப் கனவாயிலிருந்து வெளிவந்த பின் நுபுவ்வத் 10ம் ஆண்டு அன்னையவர்கள் மரணமடைந்தார்கள். அல்லாஹ் அவார்களைப் பொருந்திக் கொள்வானாக.

[/highlight]

உங்கள் கருத்தை எழுதுங்கள்
கருத்துகள்
votTouddy 4 ஆண்டு முன்பு

hydrocodone, primidone <a href=https://bestcialis20mg.com/>buy generic cialis online safely</a>

TiceOrine 4 ஆண்டு முன்பு

Opinioni Levitra https://newfasttadalafil.com/ - buy cialis online overnight shipping levitra tablet price Efficacy and safety of sildenafil citrate in men with erectile dysfunction and stable coronary artery disease. <a href=https://newfasttadalafil.com/>Cialis</a> https://newfasttadalafil.com/ - Cialis Jlgwxf